வறுமையில் வாடும் மக்களின் வாழ்வியல் நிலை மாற்றியமைக்கப்படும் – ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் தவநாதன் உறுதி!

Wednesday, June 17th, 2020

அக்கராயன் கிழக்கு கரித்தாஷ் குடியிருப்பு பகுதி மக்களின் அடிப்படை தேவைப்பாடுகள் மட்டுமல்லாது அவர்களது வாழ்வாதாரத்திற்கான பொருளாதாரமும் முழுமையாக கட்டியெழுப்பப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநெச்சி மாவட்ட நிர்வாக செயலாளரும் நடைபெறநவுள்ள நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளருமான வை. தவநாதன் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் நடைபெற்ற பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புகளுடனான சந்திப்பின்போது அப்பகுதியின் தேவைப்பாடுகள் மற்று பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்தபின் கருத்து கூறுகையிலயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்துத் அவர் கூறுகையில் –

யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னரான இன்றைய பிரதமரும் அன்றைய ஜனாதிபதியுமான மஹிந்தராஜபக்ச அவரது அமைச்சரவையில் அமைச்சராக இருந்த எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எமது கிளிநெச்சி மாவட்டத்தின் அபிவிருத்திகளை மிக வேகமாக முன்னெடுத்து அழிந்து கிடந்த தேசத்தை புத்தொழிபெறச் செய்திருந்தார்.

அப்பணிகளை நாம் முன்னெடுத்துவந்தபோது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அந்த பெரும்பணிகளை முழுமையாக கொண்டுவந்து தர எம்மால் முடியாது போனது. அதன்பின்னர் வந்த நல்லாட்சியின் பங்காளிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மக்களை மறந்து தத்தமது சுயநலங்களை மட்டுமே முன்னிறுத்தி செயற்பட்டு வந்ததால் தமிழ் மக்கள் தமது தேவைகளை பெற்றுக்கொள்ள வீதிக்கு வரவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.

மக்களது இந்த அவல நிலை மாறவேண்டும் என்பதே எமது எமது நிலைப்பாடாக உள்ளது. அதை மாற்றியமைப்பதற்கான ஆழுமையும் பொறிமுறையும் எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் உள்ளது.

ஆனாலும் அதற்கான அரசியல் பலம் எமக்கு இதுவரை போதுமானதாக தமிழ் மக்கள் வழங்கவில்லை. இம்முறை அந்த அரசியல் பலத்தை தமிழ் மக்கள் எமக்கு வழங்கி எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கரங்களை பலப்படுத்தும் என்ற நம்பிக்கை எம்மிடம் உள்ளது. அவ்வாறு நிகழுமேயானால் நிச்சயமாக அடுத்த  5 ஆண்டுகளில் தமிழ் மக்கள் படும் அனைத்து துன்பங்களுக்கும் தீர்வைப் பெற்றுத்தர எம்மதால் முடியும் என்றார்.

Related posts: