உளுந்து உற்பத்தி – வவுனியா விவசாயத் திணைக்களத்தால் விசேட வேலைத்திட்டம் – மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவிப்பு!

Sunday, March 19th, 2023

வவுனியாவில் விதை உளுந்து சேகரிப்புத் திட்டத்தின் கீழ் 125,000 கிலோ உளுந்து விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டு விவசாய திணைக்களத்தினால் சுத்தப்படுத்தப்பட்டு விதைப்புக்கு ஏற்ற விதைகளாக விற்பனை செய்யப்பட்டுவருவதாக வவுனியா விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் த.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சந்தையில் உளுந்திற்கு அதிக கேள்வி காணப்படுகின்றது. இதுவரை விவசாயத் திணைக்களத்தின் விதை மற்றும் நடுகைப் பொருட்கள் அபிவிருத்தி நிலையத்தினால் வவுனியா மாவட்ட விவசாயிகளிடமிருந்து 125,000 கிலோ உளுந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளிடம் இருந்து தலா 900 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்ட உளுந்து சுத்தம் செய்யப்பட்டு, விற்பனைக்கான விதை உளுந்தuக விவசாயிகளுக்கு கிலோ 1000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

சுத்தம் செய்யப்பட்டதன் பின்னர் சுமார் 88,000 கிலோ விதை உளுந்தை விவசாயிகளுக்கு விற்பனை செய்வதற்கு எதிர்பார்ப்பதாக வவுனியா விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.

இந்த தரமான விதைகளுக்காக பல மாகாணங்களில் இருந்து அதிக கேள்வி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


நிதிக் கோரி திறைசேரிக்கு மீண்டும் கடிதம் - வாக்குச்சீட்டு அச்சிடலுக்கு மேலும் 360 மில்லியன் அவசியம் ...
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டங்களை இலங்கை இன்னும் நிறைவுசெய்யவில்லை- பதில் நிதியமைச்சர் ஷெஹான் ச...
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பதிவு இடைநிறுத்தம் - அர்ஜுன ரணதுங்க தலைமையில் இடைக்கால நிர்வாக குழு ந...