2 ஆயிரத்து 500 கறவை பசுக்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் D.B. ஹேரத் தெரிவிப்பு!

உள்ளூர் பால் உற்பத்தியை விஸ்தரிக்கும் நோக்கில் 2 ஆயிரத்து 500 கறவைப் பசுக்களை விரைவில் இறக்குமதி செய்யவுள்ளது.
இந்நிலையில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு, பால் மற்றும் முட்டை சார்ந்த கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சர் D.B. ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும் கறவைப் பசுக்களின் இறக்குமதிகளுக்காக 4 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டி மற்றும் குருணாகல் மாவட்டங்களில் தலா 02 காணிகள் வீதம் 4 காணிகள் இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளது.
கறவைப் பசுக்களை பராமரிக்கும் நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் அரசாங்கத்தினால் மாத்திரமே மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தமிழை இழந்த பின்னர் தமிழர்கள் அடையும் அரசியல் தீர்வு பயனற்றது - நாவலர் விழாவில் இரா.செல்வவடிவேல்!
இலண்டன் விமான நிலையத்தில் குண்டு: விசாரணைகள் தீவிரம்!
கடன் பாதிப்புகளை நிர்வகிப்பது உலகப் பொருளாதாரத்திற்கு முக்கியமானது - இந்திய நிதியமைச்சர் நிரமலா சீதா...
|
|