170,000 மில்லியன் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 31ஆம் திகதி ஏல விற்பனை – மத்திய வங்கி அறிவிப்பு!
Sunday, July 28th, 2024
170,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 31ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 55,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 55,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 60,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
சர்வதேச செஞ்சிலுவை சங்க தலைவர் - கடற்படை தளபதி சந்திப்பு!
வித்தியா கொலை: விசாரணைகளை துரிதமாக மேற்கொண்ட பொலிசார் கௌரவிப்பு!
கொரோனாவின் நான்காவது அலையை உருவாக்குவதை அரசியல்வாதிகள் தவிர்க்கவேண்டும் – அமைச்சர் நாமல் வலியுறுத்து...
|
|
|


