14 இலங்கையருக்கு Interpol சிவப்பு அறிவித்தல்!
Saturday, March 16th, 2019
இலங்கைப் பிரஜைகள் 14 பேருக்கு எதிராக இன்டர்போல் இனால் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மட்டத்தில் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கே இவ்வாறு சிவப்பு அறிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச குற்றவியல் பொலிஸ் அமைப்பானது (interpol) இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இன்டர்போல் தகவல்களுக்கு அமைய நான்கு பேருக்கு விசேட சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதில், சஜீவ டி சொய்சா எனப்படும் ‘கொஸ்கொட சுஜீ, எமில் லக்ஷ்மி காந்தன், முனிசாமி தமசீலன், விக்னராசா செல்வநாதன் ஆகியோர் அடங்குகின்றனர்.
ஏனைய 10 பேருக்கும் எதிராக நாட்டின் எல்லை சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
இலங்கை கடற்பரப்பில் மூழ்கிய கப்பல்கள் விமானங்கள் தொடர்பான தரவுகளை பதிவேற்றம் செய்ய மத்திய கலாசார நித...
தரம் 1 முதல் அனைத்து பாடசாலைகளிலும் ஆங்கில மொழிமூல கல்வியை அறிமுகப்படுத்த நடவடிக்கை - அடுத்த வருடம்ம...
சர்வதேச தரத்திலான மருத்துவ வசதிகளை வழங்க யாழ் நகரில் நெரிசலற்ற சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் – யாழ்.ப...
|
|
|


