13ஆவது திருத்தச் சட்டத்தில் துரித திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் – பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டமொன்று அறிமுகப்படுத்தப்படும் – வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு!

Sunday, January 30th, 2022

13 ஆவது திருத்தச் சட்டத்தில் இரண்டு கட்டங்களாக துரித திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன என அரசாங்கம் அறிவித்துள்ளது.

13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்களுக்கு மத்தியில் எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், நாட்டில் நிலவும் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பாக கவனம் செலுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர். ஜி.எல். பீரிஸ், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நீதியமைச்சர் அலி சப்ரி ஆகியோர் ‘நீதிக்கான அணுகல்’ நடமாடும் சேவைத் திட்டத்தின் கீழ் உரையாற்றியதோடு யாழ்ப்பாணத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் குழுவையும் சந்தித்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு நட்டஈடு  உள்ளிட்ட பரிகாரங்களை வழங்குவதும் அவர்களுக்கு காணிகளை வழங்குவதும் இந்த சந்திப்பின் நோக்கமாகும்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, 13 ஆவது திருத்தச் சட்டத்தில் இரண்டு கட்டங்களாக துரித திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர். ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்திருந்தார்.

அத்தோடு, அதற்கேற்ப குழுவொன்று நியமிக்கப்பட்டு 1979 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் கொண்டுவரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே தற்போதுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டமொன்று அறிமுகப்படுத்தப்படும் எனவும் வெளிவிவகார அமைச்சர் G.L.பீரிஸ் தெரிவித்துள்ளார்;.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் தற்போது துரித திருத்தங்களை மேற்கொண்டு வருவதாகவும் இரண்டு பகுதிகளாக பிரித்து, முழுமையாக ஆராய்ந்து புதிய சட்டமொன்றை அறிமுகம் செய்யவுள்ளதாகவும் G.L.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்..

அதற்காக குழுவொன்றை நியமித்து, பொறுப்புகளை ஒப்படைத்துள்ளதாகவும் 1979 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: