உற்பத்தி செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல தேவையான அனுமதிப்பத்திரங்களை வழங்க நடவடிக்கை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரோஹண!

Tuesday, November 3rd, 2020

தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் உற்பத்தி செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லத் தேவையான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது தொடர்பான விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து. secratery@mws.gov.lk  என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்புவதன் மூலம் இதற்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை இலங்கை முதலீட்டுச் சபை என்பவற்றின் அங்கீகாரம் பெற்ற ஏற்றுமதி மற்றும் கடல் தொழில் உற்பத்திகளை முன்னெடுத்துச் செல்வது இதன் நோக்கமாகும்.

இதேவேளை, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் வெளியிடங்களுக்குச் செல்வதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இவ்வாறானவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: