வளிமண்டலத்தில் குழப்ப நிலை – பொதுமக்களுக்கு வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கை!

Sunday, October 27th, 2019


இலங்கையின் தென்கிழக்கு வளிமண்டலத்தில் ஏற்பட்டு வரும் குழப்ப நிலை காரணமாக அடைமழையுடன் கூடிய காலநிலை மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் ஊவா மாகாணத்தின் சில இடங்களில் 100 – 150 மில்லி மீற்றர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களிலும், மொனராகலை, பதுளை ஆகிய பகுதிகளிலும் இன்று முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை அடைமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும் எனவும் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண் சரிவு எச்சரிக்கை இன்று வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts: