சுற்றுலாப் பயணிகளுக்காக நாட்டை திறப்பது குறித்து ஆலோசனை – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Tuesday, May 25th, 2021

இலங்கையின் எல்லைகளை சுற்றுலாப் பயணிகளுக்காக திறப்பதற்கான எதிர்கால திட்டம் குறித்து ஆராயப்படவுள்ளதாகவும் இந்தவார இறுதியில் இது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று நடைபெறும் என்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கோவிட் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம், சுகாதார வல்லுநர்கள் மற்றும் சுற்றுலா அதிகாரிகள் ஆகியோருடன் இந்த கலந்துரையாடல் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள கோவிட் வைரஸ் நிலைமையை கண்காணித்து அதன் பின்னர் தடையை நீக்க வேண்டுமா அல்லது நீடிக்க வேண்டுமா என்று அமைச்சர் ரணதுங்க தெரிவித்துள்ளார்

இந்தநிலையில் முன்னர் அறிவித்தபடி, அனைத்து வெளிநாட்டுப் பயணிகள் வருகைக்கும் தற்போது விதிக்கப்பட்டுள்ள தடை மே 31 வரை அமுலில் இருக்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: