48 வகை மருந்து வகைகளின் விலை குறைக்கப்பட்டுள்ளதால் நோயாளர்களுக்கு 4.4 பில்லியன் ரூபா நிவாரணம்!

Friday, August 10th, 2018

48 வகை மருந்து வகைகளின் விலை குறைக்கப்பட்டுள்ளமையினால் 4.4 பில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணம் நோயாளர்களுக்குக் கிடைத்துள்ளதாக அமைசச்சரவை இணை பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அமைச்சர் கயந்த கருணாதிலக்க இதனை குறிப்பிட்டார்.

மேலும் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 48 அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டதோடு அதில் வெவ்வேறு வர்த்தக பெயர்களைக் கொண்ட 272 மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: