மாகாணசபை அதிகாரத்தை பறித்தெடுத்தவர் பிரேமதாசவே – விக்கி இதை அறியாமலுள்ளார் என்பது வெட்கமாகவுள்ளது என்கிறார் தவராசா!

Monday, September 30th, 2019

13ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் மாகாணசபைக்குக்கு கிடைத்த அதிகாரப் பகிர்வையும் மாகாணசபைச் சட்டத்தில் பிரதேச செயலகங்களை உருவாக்கியதன் மூலமாகப் பறிகொடுத்தவர் பிரேமதாச என்பதைக் கூட அறியாத ஒருவரே எமது மாகாணத்துக்கு முதலமைச்சராக இருந்தவர் என்பதை எண்ணி வெட்கப்படுகின்றேன் என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கான பதில் என முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் நேற்று முன்தினம் ஆங்கில மொழியில் செய்தி அனுப்பி வைத்துள்ளார். அது தொடர்பில் தவராசா நேற்று அனுப்பிய செய்தக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

13 ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் மாகாண சபைகளுக்குக் கிடைத்த பல அதிகாரங்களைப் பறித்தும் சில பகிர்வையும் மாகாணசபைச் சட்டத்தில் இல்லாமல் செய்ய மாற்றுச்சட்டங்களை உருவாக்கியவர் பிரேமதாஸவே. மாவட்டச் செயலகம், பிரதேசசெயலகங்களைப் பறித்தெடுத்தார். அதனாலேயே மாகாணசபை வலுவிழந்தது. 1987 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திருத்தச் சட்டத்தை சமர்ப்பிக்கும் போது மாகாணசபைச் சட்ட வரைவிலேயே சமர்ப்பிக்கப்பட்டது. அதில் ஆளுநருக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டது.

பிரேமதாசா 1992 ஆம் ஆண்டு நாடு பூராகவும் இருந்த உதவி மாவட்டச் செயலர் பணிமனைகளை பிரதேசசெயலகங்களாகத் தரமுயர்த்தி மாகாண சபையிடம் இருந்த மேலும் பல அதிகாரங்களை பறித்தெடுத்தார். இதன்மூலம் மாகாணசபையின் கீழ் இருந்த பல செயலகங்கள் பிரதேசசெயலகங்களின் கீழ் சென்றன.

அதில் கலாச்சார அலுவலகர்கள், விளையாட்டு அலுவலர், சமூகசேவை, கிராமிய அபிவிருத்தி,  சிறுவர் பாதுகாப்பு, சிறு கைத்தொழில் அபிவிருத்தி போன்றவற்றின் அலுவலகர்களுடன் காணி அலுவலகர்கள் போன்றவர்களும் உள்ளடங்குவர். இந்த அலுவலகர்கள் மாகாண சபையின் அலுலகர்கள்.

இவற்றையெல்லாம் செய்த பிரேமதாசாவின் நடவடிக்கைகள் தொடர்பில் அறியாதவரே முதலமைச்சராக 5 ஆண்டுகள் ஆட்சிசெய்தமை கவலைக்குரியது. இவ்வாறு செய்தவரின் மகனான சஜித் பிரேமதாச எந்தளவுக்கு தமிழ் மக்களுக்கு அதிகாரங்களை வழங்குவார் என்பதில் சந்தேகமே உள்ளது.

சஜித் பிரேமதாச நடைமுறைச் செயற்பாட்டாளர் என்றும் அரசதலைவராகத் தெரிவானால் திறமையான அரசதலைவர் என்பதனை நிரூபிப்பார் எனவும் குறப்பிட்டுள்ளார். ஆனால் இன்றும் தமிழ் மக்குளுக்குத் தொல்லை கொடுக்கும் முக்கிய திணைக்களங்களில் ஒன்று இவர் வசமே உள்ளது. அதாவது சஜித் பிரேமதாசவே இன்றும் தொல்லியல் திணைக்களத்தின் அமைச்சர்.

இதனால் முன்னாள் முதல்வரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலர் நாயகமுமான சி.வி.விக்கினேஸ்வரனின் பதிலைப்பார்த்து கவலை அடைகிறேன் – என்றுள்ளது.

Related posts: