புகையிரத நிலையங்களில் பொதுக் கழிப்பறைகள் – நிதி அமைச்சு!
Friday, October 11th, 2019
புகையிரத நிலையங்களில் பொதுக்கழிப்பறைகள் அமைக்கப்படவுள்ளதாகவும் இந்த வருட பாதீட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒதுக்கீட்டின் படியே இந்த கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
பொல்கஹாவல, ரம்புக்கனை, ஹட்டன், புத்தளம், சிலாபம், திருகோணமலை, மட்டக்களப்பு, ஆகிய புகையிரத நிலையங்களிலேயே இந்த கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை தவிர கடுகன்னாவ, பேராதெனிய, ஜாஎல ஆகியபுகையிரத நிலையங்களில் 9.3 மில்லியன் ஒதுக்கீட்டில் கழிப்பறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
பாதீட்டில் பேருந்து நிலையங்கள் மற்றும் புகையிரத நிலையங்களில் கழிப்பறைகளை அமைக்க அரசாங்கம் 1 பில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்துள்ளது.
Related posts:
சிறுவர் துஷ்பிரயோகத்தைக் கட்டுப்படுத்த அனைத்துத் தரப்புக்களின் ஒத்துழைப்புக்களும் அவசியம்: யாழ். மாவ...
தீவுப்பகுதியில் ஒரு லட்சம் பேர் குடியேற்றம்!
பிளாஸ்டிக் விளக்குமாறு மற்றும் தும்புத்தடி இறக்குமதியை உடனடியாக தடைசெய்ய வேண்டும் - மத்திய சுற்றாடல்...
|
|
|


