நல்லூரில் Scanner இயந்திரங்களை பொருத்த தீர்மானம்!

Friday, August 9th, 2019


நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சவ காலத்தில் இடம்பெறும் சோதனை நடவடிக்கைகள் தொடர்பாக விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், சோதனை நடவடிக்கைகளை நிறுத்தி Scanner (மெட்டல் டிறக்டர்) இயந்திரங்களை பொருத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கூறியுள்ளார்.

ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

பாதுகாப்பு ஒழுங்குகள் எப்போதும் மக்களுடைய சுதந்திரத்தை பறிப்பதாகவே அமையும். இந்நிலையில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பும் அவ்வாறானதே. அதனை மக்களும் ஆலய நிர்வாகமும் முழு மனதுடன் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.

ஆளுநரினால் வழிப்படுத்தப்படும் வடக்கு மாகாண சபை ஊடாக 4 Scanner இயந்திரங்களை குத்தகைக்கு பெற தீர்மானித்துள்ளோம். இதன் ஊடாக பக்தர்களை நிறுத்தி சோதனை செய்யவேண்டிய இல்லை.

Scanner இயந்திரம் (வெடிபொருட்கள், உலோக பொருட்களை கண்டறியும் கருவி) ஊடாக அனுப்பினால் போதுமானதாக இருக்கும்.

இதற்கடையில் வேறு சிலரும் அவ்வாறு இயந்திரத்தை பொருத்த முயற்சிப்பதாக அறிகிறோம். அது நல்லது. எவ்வளவு தேவையோஅதனை நாங்களும் பெற்றுக் கொடுக்கலாம் என்றார்.

Related posts: