நஞ்சற்ற விவசாய முயற்சியில் யாழ். பல்கலைக்கழக பட்டதாரிகள்!

Saturday, May 8th, 2021

கிளிநொச்சி, திருவையாறு பகுதியில் நான்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீட பட்டதாரிகள் இணைந்து நெல் வேளாண்மைக்கு ஏற்றவாறும் நாட்டின் அந்நிய செலவினத்தை குறைத்து நஞ்சற்ற விவசாயத்தையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

அரசாங்கத்தின் எண்ணக்கருவுக்கு ஏற்வாறு நஞ்சற்ற விவசாயம் மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற குறிக்கோளோடு நெல் விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ஏற்றவாறு நெல்லை தாங்கள்  குறைந்த செலவில் பாத்திகள் அமைத்து நெல்களை முளைக்க வைத்து அவற்றை நாற்று நடும் இயந்திரம் மூலம் விவசாயிகளுக்கு  குறைந்த செலவில் நாற்றும் நாட்டி அந்த வயல் நிலங்களுக்கு புல் பிடுங்கும் இயந்திரம் மூலம் கலைகளை பிடுங்கி களைநாசினிகள் 100 வீதம் தெளிக்காமல் நஞ்சற்ற அரிசி வழங்கும் முயற்சி யால்  விவசாயிகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளார்கள்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர் மற்றும் யாழ் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட மாணவர்கள் இருவர் என இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: