விசேட தேவைகளையுடைய பிள்ளைகளுக்கு புதிய விளையாட்டுத் திட்டம்!

Wednesday, March 27th, 2019

மாற்றுத் திறனாளி பிள்ளைகளின் தேவைகள் குறித்து சமகால அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியிருப்பதாக ஊடக அமைச்சரும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சருமான றுவன் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

இந்தப் பிள்ளைகளின் திறமைகளை முறையாகக் கண்டறிந்து, அவற்றை வெளிக்கொணரக்கூடிய திட்டமொன்றை வகுக்கப் போவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அண்மையில் அபுதாபியில் மாற்றுத் திறனாளி பிள்ளைகளுக்கான சர்வதேச விளையாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் திறமைகாட்டிய இலங்கை பிள்ளைகளைப் பாராட்டி கௌரவித்து, பணப்பரிசில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

யாழ். பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற தமிழ்- சிங்கள மாணவர்களுக்கிடையிலான மோதல் சம்பவம்: வழக்கு விசாரணை ...
இந்தியாவிடமிருந்து மேலும் 2.5 மில்லியன் அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியை கொள்வனவு செய்ய திட்டம் ...
“நட்பின் சிறகுகள்” தொனிப்பொருளுடன் வான்படையினரின் “வான் சாகசம் - 2024” கண்காட்சி நிகழ்வுகள் யாழ். ம...