தற்போதைய அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர் – தினேஷ் குணவர்தன!

Wednesday, September 18th, 2019

நாட்டின் பிரச்சினைகளுக்கு எவ்வித தீர்வையும் வழங்க முடியாத ஐக்கிய தேசியக் கடசியின் ஆட்சியை அகற்ற மக்கள் சரியான தீர்மானத்தை எடுப்பார்கள் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

காலி பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும் அனைத்து கட்சிகளுடனும் இணைந்து கோத்தபாய ராஜபக்சவின் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்வதே கட்சியின் வேலைத்திட்டம்.

ஐக்கிய தேசியக் கட்சி தற்போது பெரிய சிக்கலில் உள்ளது. நாட்டு மக்களுக்கு சம்பளத்தை வழங்க முடியாத கஷ்டத்தில் அரசாங்கம் இருக்கின்றது. இந்த கட்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை கூட ஒன்றாக வைத்திருக்க முடியவில்லை.

நாட்டுக்கு எந்த தீர்வையும் வழங்க முடியாத கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி மாறியுள்ளது. இதனால், அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகி வருகின்றனர். நான்கு ஆண்டுகள் நாட்டுக்கு செய்த அழிவுக்காக அரசாங்கத்தை விரட்டியடிக்க மக்கள் காத்திருக்கின்றனர் எனவும் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : 33 பேருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு வழக்கு - அமைச்சர் சரத் வீரசேகர!
பழிவாங்கும் நோக்குடனான அரச பணியாளர்களது இடமாற்றங்கள் மக்களுக்கு நன்மை கொடுக்காது – ஒருங்கிணைப்பு கு...
நிதி அமைச்சு சில வரிகளை அதிகரிக்கலாம் என்பதால் சில பொருட்களின் விலைகளும் அதிகரிக்க வாய்ப்பு - மத்திய...