பெரும்போக பயிர்ச்செய்கைக்கு தேவையான இரசாயன உரம் அடங்கிய முதலாவது கப்பல் நாட்டை வந்தடைந்தது!

Thursday, October 27th, 2022

பெரும்போக பயிர்ச்செய்கைக்கு தேவையான இரசாயன உரம் அடங்கிய முதலாவது கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது.

இதற்கமைய 12 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் யூரியா உரத்தினை ஏற்றிய கப்பல் நாட்டினை வந்தடைந்துள்ளது.

பெரும்போகத்திற்கு தேவையான யூரியாவினை இறக்குமதி செய்வதற்கு கோரப்பட்ட கேள்வி பத்திரத்திற்கு அமைவாகவே முதலாவது யூரியா தொகை நாட்டை வந்தடைந்துள்ளளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மெட்ரிக் தொன் யூரியா உரம் எதிர்வரும் நவம்பர் மாத இறுதியில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பெரும்போக பயிர்ச்செய்கைக்கு தேவையாக உரத்தினை இறக்குமதி செய்வதற்கு உலக வங்கியினால் 110 மில்லியன் டொலர் கடனாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

விவசாயிகளுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபை தீர்மானித்துள்ளது.

அடுத்த மாதம் முதல் விவசாயிகளுக்கான இந்த ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என சபையின் தலைவர் மத்தும பண்டார வீரசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: