வடக்கு மருத்துவர்களுக்கு மேலதிக நேரக் கொடுப்பனவு வழங்குவதற்கு நடவடிக்கை!

Wednesday, April 25th, 2018

வடக்கு மாகாண மருத்துவமனைகளில் கடமையாற்றும் மருத்துவர்களுக்கான மேலதிக நேரக்கொடுப்பனவுகள் வழங்குவது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக மாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மருத்துவர்களுக்கு மேலதிக நேரக் கொடுப்பனவு வழங்காதது தொடர்பில் அமைச்சிடம் கேட்கப்பட்டபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

வடமாகாண சுகாதார அமைச்சுக்கு உட்பட்ட மருத்துவர்களுக்கு அதிகரித்த மேலதிக நேரக்கொடுப்பனவு கடந்த இரண்டு மாதங்களாக வழங்கப்படாமல் உள்ளது என்று மருத்துவர் சமூகத்தால் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் உள்ள போதனா மருத்துவமனை மருத்துவர்களுக்கும் ஏனைய மாகாண மருத்துவமனைகளில் கடமையாற்றும் மருத்துவர்களுக்கும் மாதாமாதம் அதிகரித்த கொடுப்பனவுகள் கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் வழங்கப்படுகின்ற நிலையில் வடமாகாண சுகாதார அமைச்சுக்கு உட்பட்ட மருத்துவமனைகளில் கடமையாற்றும் மருத்துவர்களுக்கு மேலதிக நேரக்கொடுப்பனவு வழங்கப்படவில்லை என்றனர்.

இது தொடர்பில்  மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,

மருத்துவர்களுக்கு முன்னைய மேலதிக நேர அதிகரிப்பின்படி கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் புதிதாக அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவின்படி வழங்க 200 மில்லியன் ரூபா எமக்கு தேவைப்படுகின்றது. இந்த நிதி எம்மிடம் இல்லை. ஆகவே சுகாதார அமைச்சின் ஊடாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Related posts: