லம்ப்டா வைரஸ் பிறழ்வு இலங்கையிலும் பரவுவதற்கான அபாயம் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்சரிக்கை!
Saturday, July 10th, 2021
லம்ப்டா கொரோனா வைரஸ் பிறழ்வு இலங்கையிலும் பரவுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ள பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், ஹேமந்த ஹேரத் பொதுமக்கள் இது தொடர்பில் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
லம்ப்டா வைரஸ் பிறழ்வு தொடர்பில் சுகாதார அமைச்சு மிகுந்த அவதானத்துடன் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த வைரஸ் பிறழ்விற்கான மாதிரிகளை தொடர்ந்தும் பரிசோதித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லம்ப்டா கொரோனா வைரஸ் பிறழ்வு நாட்டிற்குள் பரவாதிருப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை கடற்பரப்பிலிருந்து சென்ற படகு மீது இந்திய கடலோர படையினர் தாக்குதல்!
சம்பள அதிகரிப்பை ஊழியர்களுக்கு வழங்கத் தவறிய தனியார் துறையினர் மீது நடவடிக்கை!
பொதுமக்களின் நடவடிக்கை குறித்து சுகாதாரத் துறையினர் கவலை!
|
|
|


