சம்பள அதிகரிப்பை ஊழியர்களுக்கு வழங்கத் தவறிய தனியார் துறையினர் மீது நடவடிக்கை!

Wednesday, March 8th, 2017

தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2,500 ரூபா சம்பள உயர்வை இதுவரை வழங்காத தனியார் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தொழில் திணைக்கள ஆணையாளர் நாயகம் சாந்தினி அமரதுங்க தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களுக்கு 10ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்ட போது. தனியார் துறையினருக்கும் 2,500 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க வேண்டும் என்று சட்டம் நிறைவேற்றப்பட்டது. சில நிறுவனங்கள் இன்னமும் 2,500ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கவில்லை. இந்த விடயம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொழிலாளர் உரிமையை மீறும் பெரிய குற்றமாகும். இந்த விடயம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. தனியார் தறையினருக்கு 2,500 ரூபாவை வழங்குவதற்கான சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அது குறித்து தனியார் துறைக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதுவரையில் அதிகரிப்புத் தொகையை வழங்காத நிறுவனங்கள் தொடர்பாக மாவட்ட தொழில் அலுவலக அதிகாரிக்கு அல்லது நாரஹன்பிட்டியில் உள்ள தொழில் திணைக்களத்தின் தலைமையகத்திற்கும் அறிவிக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Related posts:


கல்வியில் ஏற்படும் புரட்சியிலேயே நாடும் வளர்ச்சி பெறும் - கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்!
வவுனியாவில் அழிக்கப்பட்ட காடுகளை மீள் உருவாக்க 10 வருடங்கள் தேவை - ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி ...
சூழ்ச்சியால் அன்றி மக்களுடன் இணைந்து முடியுமானால் செய்து காட்டுங்கள் – எதிரான சக்திகளுக்கு சவால் விட...