ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியின் முதலாவது தொகை எதிர்வரும் செவ்வாயன்று நாட்டுக்கு கிடைக்கும் – அரச மருந்தக கூட்டுத்தாபனம் அறிவிப்பு!

Sunday, May 2nd, 2021

ரஷ்யாவின் Sputnik V கொரோனா தடுப்பூசியின் முதலாவது தொகை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அதிகாலை நாட்டுக்கு கிடைக்குமென அரச மருந்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதில் 15,000 தடுப்பூசிகள் உள்ளடங்கியுள்ளன. Sputnik V தடுப்பூசி இரண்டு தடவைகள் செலுத்தப்பட வேண்டும்.

முதலாவது தொகையை பெற்றவுடன் மேலும் 02 இலட்சம் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க ரஷ்யா இணங்கியுள்ளது.

இதேவேளை, இலங்கைக்கு Pfizer-BioNTech தடுப்பூசிகளை கொள்வனவு செய்வது தொடர்பில் உரிய நிறுவனத்துடன் உடன்படிக்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Pfizer-BioNTech தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமானது, அதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாக அரச மருந்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

உடன்படிக்கையில் அரச மருந்தக கூட்டுத்தாபனம் கைச்சாத்திட்ட பின்னர், தடுப்பூசிகளை நாட்டுக்கு அனுப்பும் முறைமை மற்றும் அளவு என்பன தொடர்பில் அறிவிக்கப்படுமென Pfizer நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts: