யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையம், பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் திறந்து வைப்பு!

Sunday, March 20th, 2022

யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையம், மாண்புமிகு பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையம், யாழ்ப்பாணத்திற்க்கு இரண்டு நாள் விஜயமாக நேற்றையதினம் வருகைதந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களினால் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தின் விவசாயிகள் தமது உற்பத்திகளை தகுந்த விலையில் விற்பனை செய்வதற்கும், நுகர்வோர் குறைந்த விலையில் மரக்கறிகள் பழங்களை கொள்வனவு செய்வதற்குமான வசதிகளை உருவாக்கும் நோக்கில் 200 மில்லியன் ரூபா செலவில் குறித்த மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது உரையாற்றிய பிரதமர் –

மக்களுக்கு பொறுப்புக் கூறும் அரசாங்கம் என்ற வகையில் நாம் வட பகுதி மக்களின் நலன்களையும் அதிகளவில் முன்னிறுத்தி எமது அபிவிருத்தி செயற்பாட்டை தொடர்ச்சியாக முன்னெடுத்தவருகின்றோம். என்டறும் தெரிவித்திருந்ததுடன் அதன் ஒரு தொடர்ச்சியே இந்த நிலையத்தின் திறப்புவிழாவும் அமைகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் வடக்கின் அனைத்து துறைகளயும் மீண்டும் கட்டியெழுப்பியிருந்தது எமது அரசாங்கமே என சுட்டிக்காட்டியிருந்த பிரதமர் 2015 இல் ஆட்சி மாறியதன் பின்னர் நல்லாட்சி என்று கூறப்பட்ட அரசாங்கத்தினால் எந்தவொரு அபிவிருத்தி செயற்பாடும் வடக்கில் முன்னெடுக்கப்பட்டிருக்கவில் என்றும் தெரிவித்திருந்ததுடன் நாம் 2019 இல் மீண்டும் ஆட்சி பீடத்தில் வந்தபின்னரே தற்போது அந்த நலத்திட்டங்கள் மீண்டும் நடைபெற்றுவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: