பொதுமக்களின் நடவடிக்கை குறித்து சுகாதாரத் துறையினர் கவலை!

Wednesday, May 26th, 2021

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாடு நேற்று அதிகாலை 4 மணி முதல் 19 மணித்தியாலங்களுக்கு தளர்த்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்றிரவு 11 மணி தொடக்கம் எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணக் கட்டுப்பாடு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மீண்டும் எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும் இந்த பயணக் கட்டுப்பாடு அன்றிரவு 11 மணி தொடக்கம் ஜூன் மாதம் 04 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்

இதனைத் தொடந்து எதிர்வரும் ஜூன் மாதம் 4 ஆம் திகதி இரவு 11 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும் பயணக் கட்டுப்பாடு ஜூன் மாதம் 7 ஆம் திகதி வரை தொடர்ந்தும் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் நேற்று தற்காலிகமாக பயண தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து அதிகளவிலான மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நகரங்களில் கூடியிருந்தனர். இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக அதிகளவிலான மக்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடுவது பற்றி சுகாதாரத்துறையினர் கவலை வெளியிட்டுள்ளனர்.

மக்களின் தேவை கருதியே பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படுவதாகவும் பயணக் கட்டுப்பாடு நீக்கப்படவில்லை என்று கொவிட் 19 வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts: