சுதந்திர கட்சியின் ஆதரவு கோத்தாவுக்கு: வெளியானது உத்தியோகபூர்வ அறிவிப்பு!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஆதரவளிக்கும் என அறிவித்துள்ளது.
கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான நிமால் சிறிபால டி சில்வா இதனை அறிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றையதினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நிமால் சிறிபால டி சில்வா, சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட துணைத் தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொறுப்புக்களிலிருந்து விலகிச் செல்லவில்லை என ஜெனீவாவுக்கான வதிவிடப்பிரதிநித...
2023 பாதீடு நவம்பர் 14 இல் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு - நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானம்!
மே மாத நடுப்பகுதியில் சாதாரண தரப் பரீட்சையை நடத்துவதற்கான பரீட்சை அட்டவணைகள் இறுதி செய்யப்பட்டுள்ளத...
|
|