2023 பாதீடு நவம்பர் 14 இல் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு – நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானம்!

Friday, October 28th, 2022

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கட்டடத்தில் நேற்று (27) நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான தெரிவுக்குழு அமர்வின் போதே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலம் முதலாவது வாசிப்பு, நிதியமைச்சர் சார்பில் சபை முதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்தவினால் அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அடுத்த ஆண்டுக்கான அரசாங்கத்தின் செலவினம் 3,65,726 கோடியே 56,38,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்படி அடுத்த ஆண்டுக்கான செலவினங்களில் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் அமைச்சு, நிதி பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சுக்கும் அதற்கடுத்ததாக பாதுகாப்பு அமைச்சுக்கும் அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான செலவினமான 3,65,726 கோடியே 56,38,000 ரூபாவில் அதி கூடிய ஒதுக்கீடாக உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சுக்கு 85,625 கோடியே 40,00,000 ரூபாவும் நிதி பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சுக்கு 61,393 கோடியே 70,40,000 ரூபாவும் பாதுகாப்பு அமைச்சுக்கு 53,920 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான அரசின் செலவினங்களில் விசேட செலவினமாக 2 509 கோடியே 75,40,000 ரூபா ஒதுக்கப் பட்டுள்ளதுடன் இதில் ஜனாதிபதிக்கான செலவினமாக 378 கோடியே 21,50,000 ரூபாவும் பிரதமருக்கான செலவினமாக 101 கோடியே 20 இலட்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது

புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கு 794 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இதில் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கு209 கோடியே 05 இலட்சம் ரூபாவும் பௌத்த அலுவல்கள் திணைக்களத்துக்கு 164 கோடியே 40 இலட்சம் ரூபாவுமென மொத்தம் 373 கோடியே 45 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ள அதேவேளை முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்துக்கு 18 கோடியே 40 இலட்சம் ரூபாவும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் திணைக்களத்துக்கு 21கோடியே 30 இலட்சம் ரூபாவும் இந்துசமய மற்றும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்துக்கு 29 கோடியே 40 இலட்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதி பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சுக்கு 61,393 கோடியே 70,40 000 ரூபாவும் பாதுகாப்பு அமைச்சுக்கு 41,000 கோடி ரூபாவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு 12,920கோடி ரூபாவுமென மொத்தமாக பாதுகாப்புக்கு 53,920 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

வெகுசன ஊடக அமைச்சுக்கு 28 14 கோடி ரூபாவும் நீதி ,சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு அமைச்சுக்கு 3,320 கோடி ரூபாவும் சுகாதார அமைச்சுக்கு 32,199 கோடியே 99 98,000 ரூபாவும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு 1,900 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதே போன்று வர்த்தக ,வாணிப மற்றும் உணவுப்பாதுகாப்பு அமைச்சுக்கு 607 கோடியே 60 இலட்சம் ரூபாவும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கு 37,264 கோடியே 30 இலட்சம் ரூபாவும் கமத்தொழில் அமைச்சுக்கு 11,500 கோடி ரூபாவும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சுக்கு 3,720 கோடி ரூபாவும் சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சுக்கு 1,130 கோடி ரூபாவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு 4,849கோடியே 17,60,000 ரூபாவும் கல்வி அமைச்சுக்கு 23,200 கோடி ரூபாவும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சுக்கு 85,625கோடியே 40,00,000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சுக்கு 1,445 கோடி ரூபாவும் கைத்தொழில் அமைச்சுக்கு 820கோடியே 80இலட்சம் ரூபாவும் கடற்தொழில் அமைச்சுக்கு 645 கோடி ரூபாவும் சுற்றாடல் அமைச்சுக்கு 222 கோடியே 20 இலட்சம் ரூபாவும் வன ஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு 862 கோடியே 10 இலட்சம் ரூபாவும் நீர் வழங்கல் அமைச்சுக்கு 7437 கோடியே 41இலட்சம் ரூபாவும் மகளிர்,சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சுக்கு 1,520 கோடி ரூபாவும் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சுக்கு 367 கோடியே 60 இலட்சம் ரூபாவும் தொழில்நுட்ப அமைச்சுக்கு 1,156 கோடி ரூபாவும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சுக்கு 725 கோடியே 10 இலட்சம் ரூபாவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கு 687 கோடியே 30 இலட்சம் ரூபாவும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சுக்கு 1,020 கோடி ரூபாவும் நீர்ப்பாசன அமைச்சுக்கு 8,390கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: