நீர் விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்படும் – தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவிப்பு!
Thursday, April 8th, 2021
நாடுமுழுவதும் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக நீர் விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதனால் நீரை அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பயன்படுத்துமாறு அந்த சபை அறிக்கையொன்றை வெளியிட்டு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் தற்போது பண்டிகைக் காலம் என்பதால் நீர்ப் பாவனை அதிகரித்துள்ளது. நீர் வழங்கல் நிலையங்களில் நீர் மட்டம் குறைவடைந்துள்ளதால் 24 மணிநேரமும் பொதுமக்களுக்கு ஒரே அழுத்தத்திலான நீர் விநியோகத்தினை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் உயர் நில பகுதிகளின் பாவனையாளர்களுக்கு குறைந்த அழுத்தத்துடனான நீர் விநியோகமே இடம்பெறக்கூடும் எனவும் தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
13 வருடங்கள் அனைவருக்கும் கல்வி வாய்ப்பு - பிரதியமைச்சர் இரான் விக்ரமரத்ன!
நவிண்டிலில் புதிய மதுபானசாலைக் களஞ்சியம் அமைப்பதை ஏற்கமுடியாது – ஈ.பி.டி.பியின் கரவெட்டி பிரதேச சபை ...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் எரிப்பு - முப்படைகளுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்...
|
|
|


