நவிண்டிலில் புதிய மதுபானசாலைக் களஞ்சியம் அமைப்பதை ஏற்கமுடியாது – ஈ.பி.டி.பியின் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர் சங்கீதா!

Wednesday, May 1st, 2019

மதுபானங்களால் எமது சமூகம் சீரழிந்த செல்லும் நிலையில் நவிண்டில் பகுதியில் புதிதாக மதுபானசாலை களஞ்சியம் அமைக்கப்படவுள்ளதாக பரவலாக பேசப்பட்டவரும் நிலையில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து குறித்த மதுபானசாலையை அவ்விடத்தில் அமைப்பதற்கு இடமளிக்க கூடாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர் திருமதி. சந்திரமோகன் சங்கீதா வலியுறுத்தியுள்ளார்.

கரவெட்டி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றையதினம் சபையின் சபாமண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது குறித்த விடயம் தொடர்பில் பிரேரணை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் –

எமது பிரதேச சபையின் ஆளுகைக்குள் மதுபானத்தை கட்டுப்படுத்தும் வகையில் பல திட்டங்களை நாம் எமது சபை ஊடாக முன்னெடுக்க வேண்டும். இதனூடாகவே போதையற்ற தேசமாக எமது பிரதேசத்தை மாற்றங்காணச் செய்யமடியும்.

அத்துடன் உலகை அச்சுறுத்தும் மற்றொரு உயிர் கொல்லியான பிளாஷ்ரிக் பாவனையையும் எமது பிரதேசத்தில் கட்டுப்படுத்த நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிளாஷ்ரிக் பொருட்களுக்கு மாற்றீடாக பனம்பொருள் சார் உற்பத்திகளை ஊக்குவிப்பதுடன் இயற்கையாக கிடைக்கும் வாழை இலை, தாமரை இலை, கடதாசியிலான பொருட்களை பயன்படுத்துவதற்கான ஊக்குவிப்புக்களை முன்னெடுத்து அத்துறைசார் இளைஞர் யுவதிகளின் சுயதொழிலுக்கான வாய்ப்புக்களை ஊக்கவிப்புக்க நாம் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related posts: