வித்தியா படுகொலை குற்றப்ப்திரம் தயார் அரச சட்டவாதி மேல்நீதிமன்றில் தெரிவிப்பு!

Thursday, February 9th, 2017

கூட்டு வன்புணர்வின் பின்னர் கொல்லப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வழக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தில் ஆராயப்பட்டு குற்றப்பதிரம் தயாராகிவிட்டது. அந்த வழக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் விசாரணைக்காக விரைவில் பாரப்படுத்தப்படும் என மேல் நீதிமன்றில் அரச சட்டத்தரணி நேற்று தெரிவித்துள்ளர்.

இந்த வழக்கிலுள்ள 9 சந்தேக நபரின் விளக்கமறியல் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டது. சந்தேக நபர்களின் விளக்கமறியல் காலத்தை நீடிப்பதற்காக அவர்கள் யாழ்ப்பாண மேல்நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டனர். அதன்போதே அரச சட்டத்தரணி இதனைத் தெரிவித்துள்ளார்.

ஊர்காவற்றுறை நீதிமன்றில் இருந்து மூல வழக்கு ஏடானது சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. அங்கு அந்த வழக்கேடு பரிசீலிக்கப்பட்டு விசாரணை செய்வதற்கான குற்றப்பத்திரங்களும் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. எதிர்வரும் ஏப்ரல் முதல் வாரத்திற்கு முன்னர் இந்த வழக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்றுக்குப் பாரப்படுத்தப்படும் என அரச சட்டத்தரணி நிசாந் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் இதுவரை 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் முதலில் கைது செய்யப்பட்ட 9 பேரின் விளக்கமறியல் காலம் ஒரு வருடத்தைக் கடந்து விட்டதால் சட்டமா அதிபர் திணைக்கள அறிவுறத்தலின்படி அவர்களுக்கு மேலும் ஒரு வருடம் விளக்கமறியல் நீடிப்பது என்றும் அதனை 3 மாதங்களுக்கு ஒரு தடவை கட்டம் கட்டமாக நீடிப்பது என்றும் மேல் நீதிமன்றில் கடந்த ஓகஸ்ட் மாதம் கூறப்பட்டது. அதன்படி அவர்கள் 3 மாதங்களுக்கு ஒரு தடவை யாழ்ப்பாண மேல்நீதிமன்றில் முற்படுத்த்பட்டு விளக்கமறியல் நீடிக்கப்பட்டு வருகிறது. நேற்றும் அவர்கள் முற்படுத்தப்பட்ட போது எதிர்வரும் மே மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலை நீடித்தார். நீதிபதி இளஞ்செழியன்.

Vithya

Related posts: