சட்டவிரோத சுவரொட்டிகளை நீக்க 1,045 பணியாளர்கள் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!
Wednesday, October 9th, 2019
ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய சட்டவிரோத சுவரொட்டிகள், பதாகைகளை நீக்கும் நடவடிக்கைகளுக்காக பொலிஸ் நிலையங்களில் 1,045 பணியாளர்களை இணைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சட்டவிரோத சுவரொட்டிகள், பதாகைகளை காட்சிப்படுத்துவோரை கைது செய்து வழக்குத் தாக்கல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத பதாதைகள், சுவரொட்டிகள் உள்ளிட்டவற்றை நீக்குவதற்காக சுமார் 46 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
Related posts:
2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு நாட்டின் வறுமை ஒழிப்பின் ஆரம்ப புள்ளியாகும் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிப...
எரிபொருள் விலைகளை அதிகரிப்பது தொடர்பாக இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை - அமைச்சருமான ஹெகல...
அஸ்வெசும இரண்டாம் கட்ட பதிவு - அகில இலங்கை ரீதியாக ஜனவரியில் ஆரம்பம்!
|
|
|


