குடாநாட்டின் பல பாகங்களிலும் கடும் மழை: விவசாய நிலங்கள் பாதிப்பு!

Wednesday, September 18th, 2019


யாழ் குடாநாட்டில் நிலவும் தொடர்ச்சியான மழைவீழ்ச்சி காரணமாக பல பாகங்கள் குறிப்பாக விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கும் நிலை உருவாகியுள்ளது.

கடும் வரட்சியின் பின்னர் தற்போது குடாநாட்டில் மழையுடன் கூடிய காலநிலை காணப்படுகின்றது. இந்நிலையில் தொடர்ச்சியாக சில தினங்களாக பெய்துவரும் கனமழை காரணமாக பல பாகங்களிலும் உள்ள நீர் நிலைகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

யாழ்.குடாநாட்டின் வடமராட்சி, வலிகாமம், தீவகம்  உள்ளிட்ட பகுதிகளில் சற்று அதிகமான மழைவீழ்ச்சி காணப்படுகின்றது. இதனால் கடும் வரட்சியின் பிடியிலிருந்த மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விடும் நிலை காணப்படுகின்றது.

ஆனாலும் தொடரும் மழை காரணமாக விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டள்ளது.

தற்போது பெரும் போக நெற்செய்கைக்குரிய காலம் என்பதால் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகளது நெற்பயிர்கள் முளையிலேயே அழிவுறும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் கடும் வரட்சி காரணமாக பெரும் நஷ்டங்களை எதிர்கொண்டுவந்த எமது விவசாயிகள் இம்முறை கடும் மழை காரணமாக ஆரம்ப நிலையிலேயே அழிவுகளை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது.

அதுமட்டுமன்றி அழிவுகளுக்கு நஷ்டஈடு தருவோம் என அரசு கூறி விபரங்களை வருடாவருடம் கணக்கெடுத்து தகவல்களை திரட்டினாலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடுகளை இருவரை வழங்காத நிலையும் கணப்படுகின்றது.

இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள அதிக மழைகாரணமாக பெரும்போக நெற்செய்கையின் ஆரம்ப நிலையிலேயே அழிவுகளை விவசாயிகள் சந்திக்க நேர்ந்துள்ளமையால் அவர்கள் பெரும் கவலையடைந்துள்ளதுடன்’ விவசாயத்தை கைவிடும் மநோநிலைக்கும் அவர்கள் சென்றுவிடும் நிலையும் உருவாகியுள்’ளதை அவதானிக்க முடிகின்றது.

Related posts: