அரச ஊழியர்களுக்காக புதிய நடைமுறை!

Friday, August 30th, 2019


எதிர்வரும் நாட்களில் அரச ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் பற்றிக் துணியிலான ஆடைகள் அணிந்து கடமைக்கு செல்வதனை கட்டாயமாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர் தயா கமகே இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சரவை பத்திரம் இன்னமும் தயாரிக்கப்படவில்லை. ஆனாலும் எதிர்வரும் நாட்களில் அதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறியுள்ளார். பற்றிக் ஆடை துறையினை வளர்ச்சியடைய செய்வதற்காக இந்த நடவடிக்கை பாரிய உதவியாக இருக்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:

சுற்றுச்சூழல்களில் வீசப்படும் முகக் கவசம், கையுறைகளின் எண்ணிக்கை விரைவாக அதிகரிக்கும் அபாயம் ஏற்பட ...
திங்கள்முதல் மீண்டும் மின் துண்டிப்பு - இன்றும், நாளையும் இரவு வேளைகளில் மின்சார துண்டிப்பு அமுலாக்க...
நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தனியொரு நபர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்த முடியாது - ஞானசார தேரர்...