பொதுமக்களுக்கு அவதான எச்சரிக்கை விடுக்கிறது வானிலை அவதான நிலையம்!

Wednesday, June 5th, 2019


மன்னார் தொடக்கம் கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்கரை அண்டிய கடற்பிரதேசங்களில் கடலலை உயர்வடையும் அவதானம் நிலவுவதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

குறித்த பிரதேசங்களில் கடலலை 2.5 மீற்றர் அல்லது 3 மீற்றர் வரை இரவு 7 மணி முதல் இவ்வாறு உயர்வடையக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதன் காரணமாக கடலலை நிலப்பகுதிக்கு ஊடுருவக்கூடும் என்பதால் கடலோர வாழ் மக்கள் மற்றும் மீனவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அந்த நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

Related posts: