ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிடம்  நஷ்ட ஈடு கோரிய பயணிகள்!

Sunday, August 14th, 2016

கொழும்பில் இருந்து இலண்டனுக்கான பயணத்தின் போது பயணிகளுக்கான கேட்கும் கருவிகள் வழங்கப்படாமையால், குறித்த விமான நிறுவனத்தின் மீது பயணிகள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றது.

நேற்றைய தினம் கொழும்பில் இருந்து இலண்டன் நோக்கிப் புறப்பட்ட யு எல் 503 ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் எக்கோனமிக் வகுப்பில் பயணித்தவர்களுக்கு (Headsets) கேட்கும் கருவிகள் வழங்கப்படவில்லை.

இதன் காரணமாக விநோதங்களை அனுபவிக்கமுடியாத நிலை ஏற்பட்டதாக பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்நிலையில், விமானத்தில் பயணித்த பயணிகள் தலா 200 பவுண்ட்ஸ் என்ற அடிப்படையில் 53ஆயிரத்து 800 பவுண்ட்ஸ்களை நட்ட ஈடாக கோரியுள்ளனர்.

எனினும் இந்தக்குற்றச்சாட்டு குறித்து விமான நிறுவனத் தரப்பில் இருந்து இன்னும் பதில்கள் கிடைக்கவில்லை எனவும் செய்திகள் தெரிவித்துள்ளன. இதேவேளை குறித்த விமானத்தை பாகிஸ்தானின் தேசிய விமான நிறுவனம் குத்தகைக்கு பெற்றுள்ள நிலையில் நாளை முதல் அதன் சேவைகள் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தொடர்ந்தும் மின்வெட்டு - நேர அட்டவணைக்கு அனுமதியளித்தது அறிவித்தது இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழ...
உலகளாவிய பதற்றங்களை அதிகரிக்கும் ஆத்திரமூட்டல்களை நாடுகள் தவிர்க்க வேண்டும் - ஜனாதிபதி ரணில் விக்ரமச...
ஐந்து வருடங்களுக்குள் பாலஸ்தீன அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் - அணிசேரா அரச தலைவர் மாநாட்டில் ஜனாத...