உலகளாவிய பதற்றங்களை அதிகரிக்கும் ஆத்திரமூட்டல்களை நாடுகள் தவிர்க்க வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Thursday, August 4th, 2022

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சீனத் தூதுவர் கி ஸெங்கொங் (Qi Zhengong) ஐ சந்தித்துள்ளார். இதன்போது ஒரே சீனா கொள்கை மற்றும் நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியன தொடர்பில் ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ளார்.

இது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ட்விட்டரில் பதிவொன்றில், பிராந்திய ஒருமைப்பாடு தொடர்பான ஐக்கிய நாடுகளின் சாசனத்தின் கொள்கைகளுக்கு இலங்கையின் வலுவான அர்ப்பணிப்பை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய உலகளாவிய பதற்றங்களை மேலும் அதிகரிக்கும் ஆத்திரமூட்டல்களை நாடுகள் தவிர்க்க வேண்டும் என்றும் பரஸ்பர மரியாதை, நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடாமை, அமைதியான ஒத்துழைப்பு மற்றும் மோதல்களை தவிர்த்தல் என்பன முக்கியம் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


முன்பள்ளி ஆசிரியர்களின் வாழ்வியலுக்கு ஒளியேற்றிக் கொடுத்தவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே - ஈ.பி.டி.பியி...
ஈழத் தமிழர்களின் தொப்பூள்கொடி உறவுகளான தமிழக மக்களின் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சிய...
இளம் பெண்ணின் சடலம் இரணைமடு பகுதியில்  மீட்பு: பாலியல் துஷ்பிரயோகத்தின் கொலை என சந்தேகம்!