வைத்தியர்கள் மீள சேவைக்கு திரும்பினால் அவசிய வசதிகள் வழங்கப்படும் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

ஓய்வு பெற்ற விஷேட வைத்தியர்கள் மீண்டும் சேவைக்கு திரும்புவார்களாயின் அவர்களுக்கு அவசியமான சகல வசதிகளையும் வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
தூரப் பிரதேசங்களில் பணியாற்றும் வைத்தியர்களுக்கான உத்தியோகபூர்வ வாசஸ்தலம் வைத்தியசாலைகளிலேயே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலைகளில் வைத்தியர்களுக்கான உத்தியோகபூர்வ வாசஸ்தலம் இல்லாத இடங்களில் வாடகை அடிப்படையிலேனும் வைத்தியர்களுக்கான வாசஸ்தலங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
அதேநேரம், இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த வைத்தியர்கள் நாட்டின் வைத்தியசாலைகளில் பணியாற்றவுள்ளதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான எந்தவித தீர்மானமும் எட்டப்படவில்லை என்றும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|