சில இடங்களில் இடியுடன் கூடிய மழை – வளிமண்டலவியல் திணைக்களம்’ எதிர்வுகூறல்!

Friday, November 18th, 2022

சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்’ எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இதேவேளை மழை நிலைமை : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடக்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடல் நிலை : நாட்டைச் சூழவுள்ளகடற் பரப்புகள் சாதாரண அலையுடன் காணப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

அனைத்து பாடசாலைகளும் இன்று மீண்டும் ஆரம்பம் – ஏப்ரல் 9 புதுவருட விடுமுறைக்காக மீண்டும் மூடப்படும் எ...
விடைத்தாள்களை திருத்தும் பணிகளில் தாமதம் - 2022 உயர்தர மாணவர்களின் பெற்றோர்கள் மனித உரிமைகள் ஆணைக்க...
சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு - கணினி குற்றப்பிரிவு தெரிவிப்பு!

இலங்கை ஒருமித்த  நாடாக இருக்க வேண்டும்- சொல்கிறது அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழுவின் பரிந்துரை...
ஜனாதிபதி மாளிகையில் உள்ள தொல்லியல் சின்னங்களை திருடினால், சேதப்படுத்தினால் சட்டநடவடிக்கை - தொல்லியல்...
நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இறையடிச் சேர்ந்தா...