அனைத்து பாடசாலைகளும் இன்று மீண்டும் ஆரம்பம் – ஏப்ரல் 9 புதுவருட விடுமுறைக்காக மீண்டும் மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவிப்பு!

Monday, March 15th, 2021

நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் மீண்டும் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது.  

அதேநேரம் நீண்டகாலத்திற்குப் பின்பு மேல் மாகாண பாடசாலைகளில் தரம் 05,11 மற்றும் 13 ஆம் தர வகுப்புகளும் இன்று ஆரம்பமாகியுள்ளன.

அதேவேளை மேல் மாகாண பாடசாலைகளில் தரம் 05,11,13 ஆம் தரங்களை தவிர்ந்த ஏனைய தர வகுப்பு கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் 19ஆம் திகதிமுதல் ஆரம்பிக்கப்படவிருக்கின்றன.

இதற்கமைவாக தரம் 1 தொடக்கம் தரம் 4 வரையிலும் தரம் 06 தொடக்கம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் அன்றைய தினம் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். இதனிடையே இன்று திறக்கப்பட்டுள்ள பாடசாலைகள் அனைத்தும் சித்திரைப்புத்தாண்டு விடுமுறைக்காக ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி மூடப்படவிருப்பதாக  கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி பெரேரா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

இரு வகையான பேருந்து கட்டணங்களை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆலோசனை –இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுக...
ஜனாதிபதி எடுக்கும் தீர்மானங்களை மதிக்கவேண்டும் – அவர் எடுக்கும் எந்த முடிவையும் ஏற்றுக்கொள்வேன் - பி...
இலங்கை பாதுகாப்பு சபையின் புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வின் பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவா...