சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் இலங்கை வருகை தரும் – நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ தெரிவிப்பு!

Tuesday, October 10th, 2023

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) வருடாந்த மாநாடு மொரோக்கோவின் மரகேச் (Marrakech) நகரில் இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெறவுள்ளது. அத்துடன் இந்த மாநாடு எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

மாநாட்டில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் குழு பங்கேற்றுள்ளது.

இதனிடையே, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான கடன் வசதியின் இரண்டாம் தவணை கொடுப்பனவு தொடர்பில் மேலும் கலந்துரையாடுவதற்காக அவர்கள் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தொடரும் கனமழை காரணமாக மஸ்கெலியா பகுதியில் போக்குவரத்து துண்டிப்பு – மக்கள் தற்காலிக இடங்களில் தங்கவை...
கொரியாவில் தங்கியுள்ள இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை - தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெ...
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைப்பதற்கான எவ்வித ஏற்பாடுகளும் அரசாங்கத்திடம் இல்லை – ஜனாதிபதிய...