கொரியாவில் தங்கியுள்ள இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை – தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Wednesday, August 19th, 2020

தொழில் ஒப்பந்தம் காலாவதி பின்னர் கொரியாவில் தங்கியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொரிய மனிதவள அபிவிருத்தி நிறுவகத்தில் இலங்கைக்கான கொரிய வதிவிட பிரதிநிதி கிம் வொன் ஷெங்சை (முiஅ றுழn ளுநழம) நேற்று அமைச்சர் சந்தித்தார் கொரியாவிற்கு தொழிலுக்காக செல்லும் எதிர்பார்பிலுள்ள இலங்கையருக்கு விசேட பயிற்சி நிலையம் அமைக்கப்படவுள்ளது. 200 பேர் பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் ஹோமாகமவில் அமைக்கப்படவுள்ள இந்த பயிற்சி நிலையத்திற்கு கொரியா தொழில் நுட்ப உதவிகளை வழங்குவதற்கும் இந்த சந்திப்பின் போது இணக்கம் காணப்பட்டது

தொழில் ஒப்பந்தம் காலாவதி பின்னரும் கொரியாவில் தங்கியிருக்கும் 1500 இலங்கையர்கள் இரண்டு மாதங்களுக்குள் நாட்டிற்கு அழைத்துவரப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்று பரவல் காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்கள் மாதக்கணக்கில் கொரியாவில் தங்கியுள்ளனர். இவர்களை நாட்டுக்கு அழைத்து வர முடியாமல் இருப்பதன் காரணமாக தொழில் வாய்ப்புக்காக கொரியா செல்ல காத்திருக்கும் அடுத்த குழுவினரை அங்கு அனுப்ப முடியாத நிலை இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கொரியாவில் இருந்து இவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பயிற்சி மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தவும் அவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும்  இவர்களை அழைத்து வர விசேட விமான சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளது என்றும் தெரிவித்துள்ள அமைச்சர் இந்த நடவடிக்கை இரண்டு மாதங்களில் நிறைவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: