வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையருக்கு ஓய்வுதியம்!

Saturday, November 5th, 2016

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கை பணியாளர்களுக்கான ஓய்வுதியத்திட்டம் ஒன்றை அடுத்த வருடம் அறிமுகப்படுத்தவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தபோது;

ஜனாதிபதித் தேர்தலின் போது ஜக்கிய தேசியக் கட்சியும், ஜனாதிபதியும் கூட்டாக வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளிநாடுகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கான மூன்று வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தன. வெளிநாட்டு பணியாளர்களின் குடும்பங்களுக்கான நலன்புரித் திட்டம், ஓய்வுதியத் திட்டம் மற்றும் பணியாளர்கள் அந்த நாடுகளில் ஆரம்பிக்கும் வங்கிக் கணக்குகளுக்கு 2.5வீத வட்டியை வழங்குவது ஆகியன அந்த மூன்று வாக்குறுதிகளாகும். இவர்களுக்கான ஓய்வுதியத் திட்டத்தை ஜனவரி 8ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவம் கூறினார்.

111

Related posts: