நாட்டில் கடமைக்கு தகுதியற்ற 5000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் – பதிலீடாக புதிய உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட வேண்டுமென பொலிஸ் மா அதிபர் கோரிக்கை!

Sunday, January 2nd, 2022

நாட்டில் உள மற்றும் உடல் ஆரோக்கிய காரணிகளின் அடிப்படையில் ஓய்வுறுத்தப்பட வேண்டிய சுமார் ஐயாயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என செய்திகள் செளியாகியுள்ளன.

இவ்வாறானவர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள காரணத்தினால் பொலிஸ் திணைக்களத்தின் ஒழுக்க நெறிகளை பேணுவதில் சிக்கல்கள் உருவாகியுள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பல்வேறு பயங்கரவாத செயற்பாடுகளினால் உபாதைகளுக்கு உள்ளான 537 பேரும், வேறும் பொலிஸ் பணிகளில் ஈடுபட்ட போது நோய்வாய்ப்பட்ட  ஆயிரத்து 305 பேரும், தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 699 பேரும், உளவியல் ஆரோக்கியப் பிரச்சினைகள் காரணமாக இலகு பணிகளில் அமர்த்தப்பட்டுள்ள 411 உத்தியோகத்தர்களும் இந்த ஐயாயிரம் என்ற எண்ணிக்கையில் உள்ளடங்குகின்றனர்.

இவ்வாறு ஆரோக்கிய குறைபாடுகள் உடைய உத்தியோகத்தர்களை ஓய்வுறுத்தி அவர்களுக்கு பதிலீடாக புதிய உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட வேண்டுமென பொலிஸ் மா அதிபர் அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

இதேவேளை இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் மொத்தமாக 85 ஆயிரம் பேர் கடமையாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related posts:

மேய்ச்சல் தரவைக்கு அடையாளப்படுத்தப்படும் இடம் பொருத்தப்பாடற்றதாக அமைகின்றது - கால்நடை உற்பத்தி சுகா...
இலங்கைக்கான நியூசிலாந்தின் வதிவிட உயர் ஸ்தானிகருக்கும் பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சருக...
இலங்கையில் உயர் தொழில்நுட்ப கேபிள்களின் மேல் அமைக்கப்பட்ட புதிய களனி பாலம் இலங்கையின் அரச தலைவர்களால...