வடக்கு மாகாணசபையின் ஆழுமையற்ற செயற்பாடுகளே தமிழ் மாணவா்களது கல்வி வீழ்ச்சிக்கு காரணம் –  ஈ.பி.டி.பியின் வலி கிழக்கு நிர்வாக செயலாளர் ஐங்கரன்!

Monday, December 12th, 2016

வடக்கு மாகாணசபையின் வினைத்திறனற்ற செயற்பாடுகள் காரணமாகவே எமது மாணவர்களது கல்வித்தரம் விழ்ச்சிகண்டுவருகின்றது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்  வலிகாமம் கிழக்கு பிரதேச நிர்வாக செயலாளர் இராமநாதன் ஐங்கரன் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் அச்செழு, ஒளி நிலா முன்பள்ளியின் வருடாந்த கலை விழாவும், பரிசளிப்பு விழாநிகழ்வு நிலையத் தலைவா் எஸ்.ஜெகன்குமார்  தலைமையில்  நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் –

ஒரு நாட்டினுடைய முதுகெலும்பு அந்தநாட்டில் வாழுகின்ற மக்களுடைய கல்வித் தராதரத்திலே தங்கி உள்ளது. அந்தவகையில் எமது மாணவா்களுடைய கல்வி வளர்ச்சியே எமது இனத்திற்கு வழிகாட்டியாக உள்ளது.

unnamed (1)

இந்த கல்விச் செல்வத்தை எமது மாணவா்கள் கற்றுக்கொள்ளக்கூடாது என்று கங்கணம் கட்டிய அரசியல் தலைமைகளும் எமது தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்றார்கள் தமது பிள்ளைகளை வெளிநாடுகளில் கல்வி கற்பதற்காக அனுப்பிவைத்துவிட்டு மாற்றான் தாய் பிள்ளைகளை தமது சுயலாபத்திற்காக உணர்ச்சியூட்டி போராட்டத்திற்கு அனுப்பியவா்கள் இன்று முதலைக்கண்ணீா் வடிக்கின்றார்கள். எமது தலைவா் டக்ளஸ் தேவானந்தா எமது மாணவா்களது கல்வி வளர்ச்சிக்கே அதிமுக்கியத்துவம் கொடுத்து தனது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார். இதை எவரும் மறுக்கமுடியாது.

unnamed (2)

முன்பள்ளி ஆசிரியா்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டு அவா்களிற்கான நிரந்தர நியமனம் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையினை எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நீண்டகாலம் வலியுறுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாது மக்களது தேவைகளை முன்னிறுத்தி மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துவருகின்றார் இதனை சகிக்கமுடியாதவா்கள் இன்று அவா் மீது வசைபாடுகின்றார்கள்  எமது தலைவா் டக்ளஸ் தேவானந்தா குதிரை ஓடி 6 தடவைகள் பாராளுமன்றம் சென்றவரல்ல. அவர் மக்ளது வாக்குகளை பெற்றே பாராளுமன்றம் சென்றிருக்கின்றார்.

unnamed (3)

ஆகவே நாங்கள் இன்றும் மக்களுடைய குரலாக ஒலித்துக்கொண்டிருப்போம் இதை யாரும் தடுக்கமுடியாது நாங்கள் கறுத்த கோட் அணிந்து மக்களை ஏமாற்றவில்லை. வாழ்வெட்டுக் குழுக்களை வைத்து மக்களை மிரட்டவில்லை. நாங்கள் வெளிப்படையாக அரசியல் பேசுகின்றோம். வெளிப்படையாக அரசியல் வேலைகளில் ஈடுபடுகின்றோம். இதனை மக்களாகிய நீங்கள் அனைவருக்கும் நன்குதெரியும்.

unnamed (4)

இனிவருங்காலத்தில் நீங்கள் உங்களது வருங்கால சந்ததியினரது எதிர்கால நலனிற்காக வாக்களியுங்கள் அதனூடாகவே உங்களது வாழ்வியலும் வளம்பெறும் என தெரிவித்துள்ளார்.

இன்நிகழ்வு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் கிழக்கு பிரதேச நிர்வாகச் செயலாளர் இராமநாதன் ஐங்கரன் அவர்களது அனுசரணையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது

unnamed (5)

Related posts: