வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு!
Friday, July 13th, 2018
பாண் தவிர்த்து பணிஸ், மாலு பணிஸ் உள்ளிட்ட அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களையும் 5 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
எரிபொருள் விலை அதிகரிப்பு, டொலரின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் இறக்குமதி பொருட்கள் மீதான வரி அதிகரிப்பு ஆகிய காரணங்களினாலே விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், இந்த விலையதிகரிப்பு எதிர்வரும் 16ஆம் திகதியிலிருந்து முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
சேதமடைந்த நாணயத்தாள்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் - மத்திய வங்கி !
கடனை மறுசீரமைப்பதற்காக இருதரப்பு கடன் வழங்குநர்களிடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பொதுவான தளம் அறி...
இலங்கையை இந்தியாவின் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படுத்தக்கூடிய விதத்தில் பயன்படுத்தலாம் என்ற கரிசனை க...
|
|
|


