வெசாக் வாரம் ஆரம்பம் – எரிபொருள் விற்பனை வரலாறு காணாத வகையில் அதிகரிப்பு என விநியோகஸ்தர்கள் தெரிவிப்பு!

Thursday, May 23rd, 2024

வெசாக் வாரம் ஆரம்பமாகிய  நிலையில் எரிபொருள் விற்பனை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில நாட்களாக எரிபொருள் விற்பனை குறைந்திருந்த நிலையில் திடீரென அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சில நாட்களாக எரிபொருள் பாவனை அதிகரித்து வருவதால், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் வழமையை விட அதிகமான எரிபொருள் இருப்புக்களை விண்ணப்பம் செய்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் எரிபொருள் விற்பனை மிகவும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாக விநியோகஸ்தர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தமிழ், சிங்கள புத்தாண்டு தினங்களில் மட்டும் சில விற்பனை நடந்ததாக கூறுகிறார்கள். மேலும், வெசாக் நிறைவடைந்ததன் பின்னர் எரிபொருள் விற்பனை முன்பு போலவே குறையும் என எரிபொருள் விநியோகஸ்தர்கள் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


பொலிஸார் அசமந்தம்: நீதிமன்றம் அதிருப்தி - பொலிஸ் அதிகாரிகளை நீதிமன்றம் அழைத்து நீதிவான் அறிவுறுத்தல்...
உயர்தர பரீட்சை நடைபெறும் திகதி தொடர்பில் மீண்டும் ஆராய்வு - கல்வியமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் 69 ஆயிரம் பேருக்கு குடிநீர் இல்லை - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப...