பகிரங்கமாக தீ வைத்து அழிக்க வேண்டும் – தொழில் முயற்சி பிரதி அமைச்சர் இரான் விக்ரமரத்ன!

Friday, December 16th, 2016

பாதுகாப்பு தரப்பினரால் கைப்பற்றப்படும் போதைப் பொருட்களில் 90 வீதமானவை மிகவும் சூட்சுமமான முறையில் மீண்டும் சந்தைக்கு வருவது சர்வதேச அனுபவங்களுக்கமைய தெரிந்த விடயம் என்று தொழில் முயற்சி பிரதி அமைச்சர் இரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்காரணமாக பாதுகாப்பு தரப்பினரால் பொறுப்பேற்கப்படுகின்ற அனைத்து போதைப் பொருட்களையும் பகிரங்கமாக அழிக்க வேண்டும் என்று இரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

இதுவே வேறு நாடுகளிலும் இடம்பெறுவதாக அவர் கூறினார். அண்மைக் காலங்களில் பாதுகாப்பு தரப்பினரால் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களுக்கு என்ன நடந்தது என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பியே கேள்விக்கே அவர் இவ்வாறு பதில் வழங்கினார்.

பாதுகாப்பு தரப்பினரால் கைப்பற்றப்படுகின்ற போதைப் பொருட்களின் தொகை எவ்வளவாக இருந்தாலும் அதற்கான தண்டனை சமனானது என்பதால் நீதிமன்றத்திற்கு தேவையான அளவை வைத்துக் கொண்டு ஏனையவற்றை காலிமுகத்திடலில் வைத்து பகிரங்கமாக தீ வைத்து அழிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

361292490Eran

Related posts: