13 ஆயிரம் குடும்­பங்­க­ளுக்கு உட­ன­டி வாழ்­வா­தார உதவிகள் கோரும் கிளிநொச்சி அரச அதிபர்!

Sunday, May 22nd, 2016

கிளி­நொச்சி மாவட்­டத்தில் பதின்மூ­வா­யிரம் குடும்­பங்­க­ளுக்கு உட­ன­டி­யாக வாழ்­வா­தார உதவிகளை வழங்கவேண்டிய தேவை­யுள்­ளது என மாவட்ட அர­சாங்க அதிபர் சுந்­தரம் அருமைநாயகம் தெரி­வித்­துள்ளார்.

கிளி­நொச்சி மாவட்­டத்தில் பணி­யாற்றும் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் வாழ்­வா­தார வேலைத் திட்­டங்கள் தொடர்பான கலந்­து­ரை­யாடல் ஒன்று சில தினங்களுக்கு முன்னர் மாவட்ட அரச அதிபர் சுந்­தரம் அரு­மை­நா­யகம் தலை­மையில் நடை­பெற்­றது.

இதன்போது உரை­யாற்­றிய போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில் –

கடந்த கால அசா­தா­ரண சூழ்­நி­லையால் இடம்­பெ­யர்ந்த கிளி­நொச்சி மாவட்­டத்தைச் சேர்ந்த குடும்பங்­களில் இது­வரை நாற்­பத்தி ஓரா­யி­ரத்து 934 இற்கும் மேற்­பட்ட குடும்­பங்கள் மீள்குடியேறியுள்­ளன.இவ்­வாறு மீள்­கு­டி­யே­றி­யுள்ள குடும்பங்கள் பல்­வேறு தேவை­யு­டைய குடும்பங்­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­றன.

இதில் பதின்­மூ­வா­யிரம் குடும்­பங்­க­ளுக்கு வாழ்­வா­தார உத­வி­களை அவ­ச­ர­மாக வழங்க வேண்­டிய தேவை­யுள்­ளது. தற்­போது மீள்­கு­டி­யேற்ற அமைச்­சி­னூ­டாக 1,600 பய­னா­ளி­க­ளுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான வாழ்வாதார உத­விகள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன தற்­போது இதற்­கான வேலைத்­திட்­டங் கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வருகின்றன.

கிளி­நொச்சி இர­ணை­ம­டுக்­கு­ளத்தின் புன­ர­மைப்பு பணிகள் கார­ண­மாக சுமார் 14,000 ஏக்கர் வரை­யான சிறு­போக செய்கை நிறுத்­தப்­பட்­டுள்­ளன. விவ­சா­யத்தை நம்பி வாழும் குடும்­பங்­களின் வாழ்வாதாரத்தையும் மேம்­ப­டுத்த வேண்­டிய தேவை­யுள்­ளது அத்­துடன், கால்­நடை வளர்ப்­பினை மேம்­ப­டுத்­து­வ­தற்கு மாவட்­டத்தில் 500 ஏக்கர் வரையான மேய்ச்சல் தர­வை­களை ஏற்­ப­டுத்த வேண்டிய நிலையில் இதனை அள­வீடு செய்து வர்த்­த­மானி அறிவித்தல்­களை வெளி­யிட மூன்று மில்­லியன் ரூபா நிதி ­தே­வை­யா­க­வுள்­ளது

இவ்வாறு மக்களுக்கான சேவைகளை வழங்கக் கூடிய திட்டங்களைத் தயாரித்து அதன் மூலம் தமது சேவைகளை அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆற்ற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: