பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்கு மக்களின் காணிகள் சுவீகரிப்பு – தெல்லிப்பழை பிரதேச செயலகம் அறிவிப்பு!

Sunday, May 13th, 2018

பலாலி விமான நிலையத்திற்கான காணி சுவீகரிப்பு தொடர்பான அறிவிப்பு வலி.வடக்கு பிரதேச செயலாளரால் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுவரொட்டி கட்டுவன் சந்தியில் ஒட்டப்பட்டுள்ளது. பலாலி விமான நிலையத்திற்கான காணி சுவீகரிப்பு சட்டத்தின் பிரிவு 38 (A) யின் கீழ் 07.08.1987 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்ட 465/14 ஆம் இலக்க அறிவித்தலுக்கு அமைவாக பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக காணி சுவீகரிக்கப்பட்டுள்ளது.

காணிகள் உள்ள கிராம அலுவலர் பிரிவுகள் ஜே/240 – தென்மயிலிட்டி தெற்கு, ஜே/46 – மயிலிட்டி தெற்கு, ஜே/256 – பலாலி மேற்கு, ஜே/252 – பலாலி தெற்கு, ஜே/242 – குரும்பசிட்டி பகுதிகளில் காணிகளை உடைய உரிமையாளர்கள் தெல்லிப்பழை பிரதேச செயலக காணிக்கிளையுடன் தொடர்புகொண்டு அவர்களது விபரங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இராணுவ கம்பி வேலிக்கு உட்பட்ட கட்டுவன் – மயிலிட்டி வீதி பகுதிகளில் உள் பகுதிகளில் குறிப்பிட்ட ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்படலாம். மீதிப் பகுதி விமான நிலைய விஸ்தரிப்புக்கு எடுக்கப்படவுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

நன்றி கெட்ட தமிழினம் அவப் பெயரை மாற்றும் வகையில் எம்முடைய வாக்களிப்பு அமைய வேண்டும்: தென்மாராட்சி இள...
யாழ் போதனா வைத்தியசாலையிலும் இடநெருக்கடி : சுகாதார நடவடிக்கைகளை இறுக்கமாக பேணுவதுதான் மக்கள் சமூகத்த...
பொருளாதாரம் வலுவடைவதைக் காண்பிக்கும் நேர்மறை சமிக்ஞைகள் தென்படுகின்றன - மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்...

ஜனாதிபதி மேற்கொண்ட கொள்கை ரீதியான தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை - அரசாங்ம் திட்டவ...
அத்தியாவசியப்பொருட்களின் விலைகளை சந்தை நிலைமைகளே தீர்மானிக்கின்றன – ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் வில...
வசூலிக்கப்படும் சராசரி வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கான புதிய சுற்றறிக்கை - வங்கி ஆளுநர் கலாநிதி நந்...