வெங்காயம் – டின் மீன்களுக்கான விசேட பண்ட வரியில் திருத்தம் – அரசாங்கம் நடவடிக்கை!
Monday, December 5th, 2022பெரிய வெங்காயம் மற்றும் டின் மீன்களுக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட பண்ட வரியை திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
டிசம்பர் முதலாம் திகதிமுதல் அமுலுக்கு வரும் வகையில் உரிய வரி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி, பொருளாதார உறுதிப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி கடந்த செப்டெம்பர் 22 ஆம் திகதி முதல் ஒரு கிலோகிராம் வெங்காயத்திற்கு விதிக்கப்பட்டிருந்த 50 ரூபா விசேட பண்ட வரி 10 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, கடந்த மே 18ஆம் திகதி முதல் ஒரு கிலோகிராம் டின் மீன்களுக்கு அறவிடப்பட்டுவந்த 100 ரூபா விசேட பண்ட வரி நேற்று முன்தினம் முதல் அமுலாகும் வகையில் 200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அதிக விளைச்சலுக்கு விதை அத்தாட்சிப்படுத்தப்படும் - நிலையப் பொறுப்பதிகாரி தகவல்!
ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகிறது விவசாயிகள் கூட்டமைப்பு!
புதிய தொழில்நுட்பத்தினூடாக சுங்க நடவடிக்கைகளை நவீன மயப்படுத்த திட்டம்!
|
|