நடமாடும் வியாபாரிகள் கையுறை, மேலங்கி அணிதல் கட்டாயம்!

Thursday, March 8th, 2018

யாழ்ப்பாண மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் நடமாடும் உணவு வண்டில் வியாபாரத்தில் ஈடுபடுவோர் கையுறை, மற்றும் மேலங்கி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று மாநகர சபையின் பொதுச் சுகாதார பரிசோதகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:

யாழ்ப்பாண மாநகருக்கு உட்பட்ட பிரதேசத்தில் வண்டிகளில் நடமாடும் உணவு வியாபாரத்தை பலர் மேற்கொள்ளுகின்றனர். அவர்கள் தமது வியாபாரத்துக்கான அனுமதியை மாநகர சபையில் பெறுதல் அவசியம். மக்களுக்கான சிற்றுண்டிகளை விற்பனை செய்யும் அவர்கள் அவர்களுக்கான சுகாதாரத்தை பேணுவது அவசியம். கையுறை, மேலங்கி மற்றும் தலைக்கான உறை அணிவது கட்டாயமானது. உணவு பொரித்தல் செயற்பாடுகளை மேற்கொண்ட பின்னர் அதனை விற்பனை செய்யும் போது கையுறை அணிவது அவசியம். அதேபோன்று தலைமுடி உதிராதவாறு தலைக்குரிய நெட் அணிவது அணிவது அவசியம். இந்த நடைமுறைகளை உணவுக்குள் பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. நடப்பு வருடத்தில் இவ்வாறு வியாபாரி ஒருவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts: