விவசாய தொழிநுட்பப் பரிமாற்றம் தொடர்பில் இலங்கை – வியட்நாம் நாடுகளுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!

Thursday, February 22nd, 2024

விவசாய தொழிநுட்பப் பரிமாற்றம் தொடர்பில் இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37 ஆவது மாநாடு கொழும்பில் இடம்பெற்று வருகின்ற நிலையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதன்படி விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் வியட்நாம் நாட்டின் விவசாயத்துறை உட்பட கிராம அபிவிருத்தி அமைச்சர் மின்மொஹான் ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

விவசாய தொழினுட்ப தொடர்பிலான ஆய்வுகள் மற்றும் விவசாயிகள் மற்றும் அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்குதல் பூச்சிக்கொல்லி பயன்பாடு ஆகிய விடயங்கள் ஒப்பந்தத்தில் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

எரிபொருளுக்கான விலை சூத்திரத்தைக் கொண்டு வருவதற்கு இதுவரையில் எந்தவித கொள்கை ரீதியான தீர்மானமும் மேற...
இரண்டு நாள் விஜயமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் வருகை – பல்வேறு நிகழ்வகளிலும் பங்கேற்பு!
2026 ஆம் ஆண்டு இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடருக்கு இலங்கை அணி நேரடியாகத் தகுதி -...